மயங்கிய கார்கே.. தாங்கிப் பிடித்த நிர்வாகிகள்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிக் கொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு லேசாக மயங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. திடீரென அவர் பேச்சை நிறுத்தி நிற்கவே சிரமப்படுவதை கவனித்த நிர்வாகிகள், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அமர்ந்தார் கார்கே.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு

7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலால் பெரும் எதிர்ப்பார்ப்பு..

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட போவதில்லை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார்

அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது. ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட […]

புதுச்சேரி மற்றும் ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது;

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன் முயற்சிகள் பாரத தேசத்துப் பெண்களின் அரசியல், சமுதாய, பொருளாதார விழிப்புணர்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித் ஷா ஆகியோருக்கு பெண்கள் அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்- புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், தலைமை நீதிபதியின் தீர்ப்பு:

சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். ▪️370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ▪️ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை ▪️ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ▪️குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது