தூத்துக்குடி கைதியை பாளையங்கோட்டை சிறையில் அடித்துக் கொல்ல முயற்சி.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருதவேல் என்ற விசாரணை கைதி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, கொலை மிரட்டல், பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புகாரில் இவருடன் கைதான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும் சிறையில் உள்ளனர். பிரபல ரவுடி ஒருவரின் வீட்டில் மான் கொம்பு, துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பப்பற்றப்பட்டது, நெல்லை ரவுடி ஒருவரின் காதலி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக ஒரே குழுவைச் சேர்ந்த கைதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.இந்த நிலையில் […]

புழல் சிறையில் கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு

புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாலவர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.

புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு சிறையில் A. class வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.