தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி ஐடி இன்ஜினியர் தற்கொலை

தாழம்பூர் அடுத்த வேங்கடமங்லத்தில் பில்லி சூனியம் பயத்தால் மன அழுத்தம் பாதித்த ஐ.டி பொறியாளர் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி பொறியாளர் கார்த்திகேயன்(50), வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக புலம்பியவாறு இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பரிகார பூஜைகளை செய்துவந்துள்ளனர். அதே வேளையில் தனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாக கார்திகேயன் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் […]
இன்ஃபோசிஸ் ₹32,000 கோடி வரி ஏய்ப்பு என தகவல்

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் மீது ₹32,000 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு புகாரில் விசாரணை என தகவல் தமிழ்நாடு 2017 -2022 கால கட்டத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கரூரில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் சகோதரி வீட்டில் IT சோதனை
25 ஆண்டுகளில் முதல் முறையாக ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை சரிவு

25 ஆண்டுகளில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 51,744 குறைந்துள்ளது. இதன்மூலம் 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 20.6 லட்சமாக உள்ளது.
ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐடி நிறுவனம்

முன்னணி ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளன. ஆனால், காக்னிசன்ட் நிறுவனம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ”ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம், அலுவலகத்துக்கு வர வேண்டிய கட்டாயமில்லை” என அறிவித்துள்ளது. சமூக மூலதனம் முக்கியமானது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐன்ஸ்டீனை விட அதிக IQ பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே கல்லூரி டிகிரி. வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும் சம்பளம் 153 கோடியில்.

இந்த பெருமைக்கு உடையவர் தான்திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்றஇளம் மாமேதை. தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம் அதுவும் ஏழாவது மாதத்திலேஇன்னும் 30 நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள். ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள், அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற. பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு […]