நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடான இந்தியா, பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றன

“சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி,மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது”
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி, டெல்லி அணிக்காக […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்துவரும் நிலையில், ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 6வது சிறப்பு விமானம் மூலம் 143 பேர் இந்தியா திரும்பினர்
உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி முதலில் ஆடிய வங்கதேச அணி, 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக விராட்கோலி – 103*, சுப்மன் கில் – 53, ரோஹித் ஷர்மா – 48 ரன்கள் எடுத்தனர்.
உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு 2023

மும்பையில், உலகளாவிய கடல்சார் இந்திய உச்சிமாநாடு- 2023. அக்டோபார் 17 முதல் 19 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தனி அமர்வில், தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மாலை உரையாற்றினார். இந்த அமர்வில், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை […]
ODI WC 2023 | ரோகித் சர்மாவின் சாதனை சதம் – ஆப்கனை எளிதில் வென்றது இந்தியா!

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை சதம் விளாசினார். 273 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – இஷான் கிஷன் இணை இம்முறை சிறப்பான துவக்கம் கொடுத்தது. இஷான் நிதானத்தை கடைபிடிக்க ரோகித் ஆப்கன் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். தொடக்கம் முதலே அதிரடியை கையாண்ட அவர், 30 பந்துகளில் அரைசதம் […]
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
இந்திய பணக்கார்கள் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி

ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 2014ல் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு ரூ. 4.74 லட்சம் லட்சம் கோடியாக சரிந்துள்ளதால் பணக்காரர்கள் பட்டியலில் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் ஆயத்தீர்வையை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது

அதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில், ஐ.எப்.எம்.எல். மீது விதிக்கப்படக்கூடிய ஆயத்தீர்வையை உயர்த்தும் சட்ட மசோதாவை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: மாநில வருவாயை பெருக்கும் நோக்கத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீது விதிக்ககூடிய ஆயத்தீர்வையின் அதிகபட்ச தொகையை, சாதாரண வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 250-ல் இருந்து ரூ. 500-க்கும்; நடுத்தர வகைகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 300லிருந்து ரூ. 600க்கும்; […]
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சத்து 8 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கவுதம் அதானி 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.