புதிய வருமான வரி திட்டம் அறிவிப்பின்படி 3 லட்சம் வரை வரி கிடையாது

மூன்று லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு 5 சதவிகித வரி 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரி 10லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதம் வரி 12 இலிருந்து 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி 15 லட்சத்திற்கும் மேலிருந்தால் 30 சதவிகிதம் வரி அறிவிப்பு
பொதுவான வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், 2024 ஏப்ரல் 1, அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது
வருமான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை ! தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும் -நிர்மலா சீதாராமன்
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
சென்னை தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

தி. நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது

ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இதன் போது, ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.290 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்1 கோடியே 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்த….வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை…
வருமான வரி துறையிடம் பணத்தை ஒப்படைக்க முடிவு….
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய்க்கு ரூ.1 கோடி அபராதம்!

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, புலி திரைப்படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித் துறை சம்மன்

வரும் சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக சம்மன் 6 ஆண்டுகளாக ரூ 1050 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்