மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்வு. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று(ஜூலை 17) கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்ற நிலையில், இன்று ரூ.120க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.
நிலம், வீடு உள்பட சொத்துக்களின் விலை உயர்கிறது… அமலானது பதிவுத்துறை சேவைக் கட்டண உயர்வு..!
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 20 விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் .