அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – காவல்துறையை சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் என்எல்சிக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான் என உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்தார். நிலக்கரி தீர்ந்துவிட்டால் நிலம்கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்கமாட்டார்கள். தொழிலாளர் – என்எல்சி பிரச்னைக்கு தீர்வுகாண மத்தியஸ்தரை நியமிப்பது பற்றி மத்திய அரசு 22ல் கூறவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிரதமர்,எதிர்க்கட்சி தலைவரை கொண்ட குழு தான் இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்:மார்ச் 2ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதை ரத்து செய்யும் வகையில் மத்தியஅரசு மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மரியாதை?
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய

சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
செந்தில் பாலாஜி வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் கோரிய இடையீட்டு மனு

புலன் விசாரணை குறித்து அறிக்கை அளிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றம் கேள்வி விளக்கம் அளிக்க தமிழக மத்திய குற்றப்பிரிவுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் இல்லையெனில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை விசாரணை

உச்சநீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 10 மணி நேரத்தைக் கடந்து விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு = நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரம் 2வது நாளாக இன்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை […]
மது விற்பனை நேரத்தை குறைப்பதை அமல்படுத்தாதது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும் என்றும், இதை மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால், இந்த உத்தரவை எட்டு மாத காலமாக அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி […]
“உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் பயிர்கள் கருகியுள்ளன”

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” “பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்