சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.
பார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இது தொடர்பாக கலால் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அரசு தரப்பில் பதில்.
தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கி, பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என புதிய மசோதா இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் ஏற்கனவே, டெல்லி நிர்வாகத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க, உடனடியாக அவசர சட்டம் பிறப்பித்து தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்தது ஒன்றிய அரசு
நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்

புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும்; அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது.