திருமலை நகர் ஸ்ரீ சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் சிறப்பு வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டை நேரு நகரில் அனுமன் ஜெயந்தி விழா

குரோம்பேட்டை நேரு நகர் குமரன் குன்றம் ஸ்ரீ பிரசன்ன யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா தாரனை காட்டப்பட்டது மாலையில் அனுமனுக்கு வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்
இன்று….நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு அதிகாலையில் லட்சத்தி 8 வடமாலை சாத்தப்பட்டு பின்பு பல்வேறு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் மற்றும் வைர நாமம் சாத்தப்பட்டது
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!
தமிழ்நாடு முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயங்களில் வழிபாடு செய்தனர் பல வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி அனுமனுக்கு சிறப்பு ஆராதனை
குரோம்பேட்டை ராதா நகரில் அனுமன் ஜெயந்தி விழா

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கும்ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரம் செய்து ஆஞ்சநேயர் ஆலயத்தின் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயரின் உள்பிரகாரத்தில் வடை மாலைகள் சாற்றப்பட்டு பாதாம் முந்திரி ஏலக்காய் திராட்சை கிராம்பு மற்றும் உலர் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதை சுற்றுவட்டாரத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் […]
அனுமன் ஜெயந்தி 2024 : அனுமனை எந்த நேரத்தில், எப்படி வழிபட்டால் துன்பங்கள் விலகும்?

சிரஞ்ஜீவியாக கலியுகத்திலும் ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறது அங்கு ஓடிச் சென்று, அடக்கமாக அமர்ந்து ராம நாமத்தை கேட்டு மகிழ்வதுடன், ராமனை வணங்குபவர்களுக்கும், ராம நாமத்தை சொல்லுபவர்களுக்கும் உடனடியாக அருளக் கூடியவர். நித்திய பிரம்மசாரியான அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் வெண்ணெய் உருகுவது போல் நம்முடைய கஷ்டங்களும் உடனடியாக உருகி காணாமல் போய் விடும் என்பது நம்பிக்கை ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் […]