களத்தில் இருப்பது யார்?விஜய்க்கு சீமான் பதில்
ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி மத்தவங்களை எல்லாம் களத்தில் இல்லை அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார் எது குறித்து சீமானிடம் கேட்டபோது நானும் களத்தில் இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்
இம்ரான் கானுக்கு 17 ஆண்டு சிறை
சவுதி அரேபியா மன்னரிடம் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கானும் அவரை மனைவியும் முறைகேடாக தங்கம் வாங்கி உள்ளனர் இது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .இம்ரான் கான் ஏற்கனவே சிறைவாசத்தில் தான் உள்ளார்
சபரிமலை தங்கம் திருட்டு சென்னை தொழில் அதிபர் கைது
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார். துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாாிகள் […]
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மாலை மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்நிலையில், பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது.
டெல்லி பனிமூட்டம் 129 விமானங்கள் ரத்து
வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், பல மாநிலங்களில் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கடும் பனிமூட்டத்தால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 129 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்க விலையில் சிறிய உயர்வு
இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலையால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல் நகரில் உள்ள பிரபல விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை;ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்டு அலங்காரம்.
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்
சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் – சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம். ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?
தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்களது பெயர் இடம்பெறுமா என்பதை முன்கூட்டியே அதாவது இன்றே அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் விவரங்களுக்கு (view details) […]