முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்

ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஆளுநர் அழைப்பு
கேரள ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல்.7 மசோதாக்ககளை குடியரசு தலைவருக்கு அனுப்பினார்

இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் எட்டு மசோதாக்கள் மீதும் முடிவு…. உச்ச நீதிமன்றம் கடுமை காட்டத் தொடங்கியவுடன் ஆளுநர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு. TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்.
வரும் 18’ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது அதில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்?”

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
2020 ஆம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு

கிடப்பில் போட்டு வைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் வாதம்
சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளை கூட தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்

இது அரசின் உரிமைகளை பறிக்கும் விஷயம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம் என தமிழ்நாடு அரசு வாதம்
தமிழ்நாடு அரசு , தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆளுநர் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ்

ஏன் கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என உச்சநீதிமன்றத்திற்கு அவர் சார்பில் பதில் அளிக்க வேண்டும்
தமிழ்நாடு ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கக்கூடிய வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு
மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு