ஆலந்தூர் அருகே 500 கோடி அரசு நிலம் மீட்பு

சென்னை ஆலந்தூர் அடுத்த பட்ரோட்டில் 500 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர், இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தெரியவந்ததன் பேரில் செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் இன்று இடிக்கும் பணி துவங்கியது. வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது. இதே போல் இதற்கு அருகில் எஸ்.பி.ஐ.வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு […]
தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு?: ஐகோர்ட் கேள்வி

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு ஒரு தணிக்கை அமைப்பு தானே?; இதில் என்ன தவறு என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக ஊடக தளங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறியும் வகையில் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருப்பி அனுப்பினார். மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 2022 நிலையில் 5 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரியும் தினக்கூலி தொகுப்பூதிய பணியாளர்களின் பணியினை வரன்முறை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு
கிரிக்கெட் வாரியத்தை கலைத்த இலங்கை அரசு

50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு. 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.
கத்திப்பாரா அருகே ரூ 800 கோடி அரசு நிலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக குத்தகை என ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் பயன்படுத்திய நபர்கள் சர்வே என் 480ல் டோமிக் சேவியர் என்பவர் பெயரில் 3196 ச.அடி, சர்வே எண்.458ல் ஹேமலதா என்பவர் 29,450 ச.அடி, சர்வே எண்1352ல் நிசாருதீன் என்பவர் பெயரில் 32,500 ச.அடி என மொத்தம்65,156 ச.அடி ஆகும், என இப்பகுதியில் அரசு நில மதிப்பு ஒரு ச.அடி 10 ஆயிரம் என்கிற நிலையில் […]
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற […]
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல்

8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம். மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் – கேரள அரசு கோரிக்கை தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்

– மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு !
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்க உத்தரவு 18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்க உத்தரவு 2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மருத்துவ […]