சாலையைக் கடக்க முயன்ற 4 பேரை இடித்து தள்ளிவிட்டு பறந்த கார்

தாம்பரம் சானடோரியம், அப்பாராவ் காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (50).இவர் ராயப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார், இவரது மனைவி அமலா ஹாசல் (48), சித்த மருத்துவராக உள்ளார்.தம்பதியருக்கு 12 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர். அவர்கள் இருவரும் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள், இந்நிலையில் பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வந்த மகன் மற்றும் மகளை வழக்கம் போல அமலா ஹாசல் சானடோரியம், […]

உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதல்!*

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் இத்தாக்குதலில் முக்கிய இலக்காக இருந்தது. இதில் ஒருவர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அதேசமயம் உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானத்தில் குண்டு போடும் டுரோன்களை ஏற்றிச்சென்று ரஷ்ய ராடார்களை குண்டு வீசி அழித்துள்ளது இதன் காரணமாகவே ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிபா வைரஸ் பரிசோதனைக்காக மாவட்டம் தோறும் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

ஜனவரி முதல் மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி செயல்படும்.

மறுரையில் 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்​டிடத்​தில் கல்லூரி செயல்படும். ஜனவரிக்​குள் ஆய்​வகங்​கள், கல்​லூரி​யில் தங்​கிப் படிக்​கும் மாணவர்​களுக்​கான வசதி​கள் மற்​றும் 150 படுக்​கைகளு​டன் கூடிய மருத்​து​வ​மனை உள்​ளிட்​டவை அமைக்​கப்​படும். 2027-க்​குள் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை பணி​கள் நிறைவு​பெற்​று, முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும் என்று அதன் நிர்வாக அதிகாரி கூறி​னார்​.

7 – ந்தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு. செய்யப்பட்டு உள்ளது. 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு டோக்கன்கள். 2 சார் பதிவாளர் ஒதுக்கப்படுகின்றன. அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத் துறை. தெரிவித்து உள்ளது.

பாஜகவுக்கு பெண் தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நட்டா உள்ளார் .அவரது பதவி காலம் முடிந்து புதிய தலைவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால் கடும் போட்டி இருப்பதை தொடர்ந்து பெண் ஒருவரை தலைவராக்க ஆர்எஸ்எஸ் இயக்கம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வானதி சீனிவாசன் புரந்தேஸ்வரி ஆகிய மூவரில் ஒருவர் தலைவர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவரானால் அது புதிய சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஓடு பாதையை விட்டு விலகி ஓடிய விமானம்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகா ணம் கிராஸ்கீஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 15பேர் இருந்தனர். கிராஸ்கீஸ் விமான நிலையத்தில் தரை யிறங்கும்போது அந்த விமானம் ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங் கிருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து விமான போக் குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

அஜித்தின் புதிய படம்

அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக் கும் நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பெயர் அடி பட்டது. இப்போது சரணின் பெயர் பேசப் பட்டு வருகிறது. அஜித்குமாரை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ போன்ற ‘ஹிட்’ படங்களை எடுத்த சரண், மீண்டும் அஜித் குமாருடன் இணையலாம் என்று பேசப்படுகிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது.

ஜப்பானில் 2 வாரத்தில் 900 நிலநடுக்கம்

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன் படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிக ளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவு றுத்தி உள்ளது. இதற்காக இதற்காக டோகாரா […]

அஜித்குமாரை அடிக்க உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார்?

பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டாலும், தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக […]