தமிழக பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் உறுதுணையாக இருக்கும்: உன்சூ கிம் உறுதி.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கும் நிறுவனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்கள் விவரங்கள் வருமாறு:- டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை 12 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் […]