கத்தார் மீது தாக்குதல் – சென்னையில் விமானங்கள் ரத்து
ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனதாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின
ஈரானில் குண்டு வீச இந்திய வான்வெளி பயன்படுத்தப் பட்டதா?
ஈரானில் அமெரிக்கா 3 அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியதாக அறிவித்துள்ளது இதற்காக இந்திய வான் வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது
விமான பயணத்தில் கேட்க கூடாத வார்த்தை
மேடே (Mayday): விமான பயணங்களின்போது நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை இதுதான். இன்ஜின் முழுமையாக செயலிழப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழல்களில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். m’aidez என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து மேடே என்ற வார்த்தை உருவானது. ‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் ஆகும். உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் தொடங்கும்போது, பைலட்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும். […]
மின்னல் தாக்கியதில் நடுவானில் ஆட்டம்போட்ட விமானம்.. மரண பீதியில் பயணிகள்*
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் நடுவானில் குலுங்கியுள்ளது. இதனால், விமான பயணிகள் பீதியின் உச்சத்தில் இருந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் சேதமடைந்த நிலையில் விமானியின் சாதுர்யத்தால், 227 பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) டெரெக் ஓ‘பிரையன், சாகரிகா கோஸ், நதிமுல் ஹக், மம்தா தாக்கூர் மற்றும் மனாஸ் பூயான் ஆகியோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது
மயக்கத்தில் விமானி… நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.விமானி அவசரத்திற்காக ரெஸ்ட் ரூம் சென்றுள்ளார். இதனால், விமானம் முழுவதும் துணை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது, துணை விமானிக்கு லேசாக மயக்கம் வந்துள்ளது. அவர், அப்படியே மயக்கத்தில் சரிந்து விட்டார்.வெளியே சென்ற விமானி மீண்டும் விமானி அறைக்குள் வர முயன்றபோது, அதன் கதவு பூட்டிக்கொண்டது.விமானத்தின் கேப்டன், கதவை திறக்க பலமுறை முயன்றுள்ளார். முடியவில்லை. அப்போது, விமான […]
உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.
அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து

டெல்லிக்கு இயக்கப்படும் 4 விமானங்கள், சீரடி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து டெல்லி, சீரடி, ஐதராபாத் நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி
நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் ரத்து முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் – ஏர் இந்தியா ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு
நடுவானில் பெயர்ந்து விழுந்த விமானத்தின் கதவு: பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கதவு பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அமெரிக்காவில் 177 பயணிகளுடன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி நேற்று புறப்பட்டது. விமானம் 16,000 அடி உயரத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு மற்றும் இருக்கை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் […]