முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.

கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]

தீயணைப்பு படையில் ட்ரோன் பயன்படுத்த முடிவு

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாநில தீயணைப்பு பயிற்சி மையத்தில் புதிய தீயணைப்போருக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி துவங்கபட்டது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள 120 தீயணைப்போருக்கு நியமன ஆணையை வழங்கி அவர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சியினை துவக்கி வைத்தார். மேலும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அலுவலர் இருசம்மாளுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த இயக்குநர் அபாஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி […]