காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]
குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்

குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடக்கம் – 2,113 பட்டதாரிகள் எழுதுகின்றனர்.

சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவ. 19-ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் […]
நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்

நடப்பு கல்வியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு, தேசிய எக்ஸிட் டெஸ்ட் என்ற, ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் நிலை 1, நெக்ஸ்ட் நிலை 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளது. அதன்படி, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தபின், நெக்ஸ்ட் நிலை 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி டாக்டராக […]
என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு […]