விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு

நான் சென்ற இடமெல்லாம், மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடந்தது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்”இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்: தோ்தல் நிபுணா் கணிப்பு

நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா். கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் செலவுகளைவிட தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் செலவே மிக அதிகமானது எனவும் உலகிலேயே மிக அதிகமாக செலவு செய்யப்படும் பிரம்மாண்ட தோ்தலும் இதுதான் எனவும் அவா் தெரிவித்தாா்
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]
செம்பாக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மண்டலகுழு தலைவர் ஜெய பிரதீப் சந்திரன் தேர்தல் களப்பணியில் கட்சி நிர்வாகிகளுடன் பணியாற்றிய போது எடுத்த படம்
மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிய போது எடுத்த படம்
செம்பாக்கம் வடக்கு பகுதியில் பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுவதை செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் ஆய்வு செய்தனர்

அருகில் சரண்யா மதுரைவீரன் எம்.சி, வட்ட செயலாளர் க.ரமேஷ், உடன் இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவரணி கலந்து கொண்டனர்.
மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிய போது எடுத்த படம்
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்