மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மொரீசியஸில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு 7.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது

தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை. இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

நெல்லை, தென்காசியில் நில அதிர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் நில அதிர்வு

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் நேற்றிரவு நில அதிர்வு; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல்

ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஜப்பான் நாட்டில் கோஷிமாவுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷிமாவில் இருந்து 143 கி.மீ. தொலைவில் நேற்று இரவு 10.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொள்ளலாம்

சென்னையில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

சென்னை அருகே கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். முன்னதாக […]