முளைப்பயறு தோசை

தேவையானவை : முளைகட்டிய பயறு அரை கப்,தோசை மாவு ஒரு கப்,எண்ணெய்,உப்பு தேவையான அளவு. செய்முறை முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
முடக்கற்றான் சோள தோசை

தேவையானவை: முடக்கற்றான் கீரை – 1 கைப்பிடிநாட்டுச் சோளம் – 1 கிலோஉளுந்து – 200 கிராம்எண்ணெய் – தேவையானவைசின்ன வெங்காயம் – 4மிளகு – அரை தேக்கரண்டிபூண்டு – 2 பல். செய்முறை: நாட்டுச் சோளத்தையும், உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வாணலியில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து வதக்கி, மிக்ஸில் அரைத்து சோளமாவுடன் […]