கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

மேலும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வலியுறுத்திய மருத்துவக் குழு எனினும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் மருத்துவர் பாலாஜி அடுத்த 6 வார காலம், மருத்துவர் பாலாஜி மருத்துவ விடுப்பில் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்.
மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்

மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.
அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் 9000பேர் கண்தானம்

சென்னை அடுத்த அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை, 9 ஆயிரம் பேர் கண் தானம் பட்டியலை தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர் ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பேர் கண் தானம் மிக பெரிய சாதனை, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக பெருமிதம் சென்னை அடுத்த கானத்தூரில் அமெட் பல்கலைக்கழகம் சார்பில் “விழி கொடுத்து வாழ்விற்கு ஒளி கொடுப்போம்” ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் கண் தானம் […]
புதிய அமைப்பு உதயம்.
டாக்டர்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராகவேலு உள்பட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள் தாம்பரம் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மருத்துவர் அனைவரும் பங்கேற்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் பி சந்தானம் தெரிவித்துள்ளார்.இது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்
“பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை அதிர்ச்சியளித்தது” – குடியரசுத் தலைவர்
ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது எப்படி ?பிரபல டாக்டர் பேட்டி

ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது குறித்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் பேட்டி அளித்தார். ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினம் 7 மே 2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோய், ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும்.குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர். பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக், ஆஸ்துமாவை நிர்வகித்தல் […]
உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]
பிறந்த மருத்துவமனையிலேயே வேலைக்கு சேர்ந்த பெண் மருத்துவர் பானு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்து அதே மருத்துவமனையில் சேவையாற்றி அசத்தும் பெண் மருத்துவர் பானு தந்தை இறந்த பின் தாயார் கைத்தறி கூலி வேலை செய்து தன்னையும் தன் சகோதரியையும் வளர்த்து ஆளாக்கியதாக நெகிழ்ச்சி நிறைய மருத்துவமனைகளில் வாய்ப்பு வந்தும், தான் பிறந்த மருத்துவமனையிலே பணியாற்ற விரும்பிய ஏற்றதாகவும் பேட்டி.