காவிரி நீர் திறக்காத கர்நாடகாவை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

மேட்டூர்- டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம். குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கனஅடி நீர் திறக்கப்படுவதாக தகவல்

காவிரிப் பிரச்சனை: டெல்டா மாவட்டங்களில் ‘பந்த்’ போராட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு! காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் […]

டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார்

டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் அங்கிருந்து நாகை சென்று திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஆக. 21, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், ஆக. 22-ம்தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஆக. 21) […]