142 ரயில்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மெல்ல நகர்ந்து வருகிறது. இது டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 142 ரெயில்கள் 7ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இலாகா அறிவித்துள்ளது.
தமிழகத்தில் `மிக்ஜாம்’ புயல் பாதிப்பை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வரும் தமிழக போலீசார் !
புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு தயார் நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற 900 போலீசார் 18 குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, மணிமுத்தாறு பகுதிகளுக்கு தலா 3 குழுக்களும், கடலூருக்கு 2 குழுக்களும் அனுப்பி வைப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, பழனி பகுதிகளுக்கு தலா ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது 164 மீட்பு உபகரணங்கள் மற்றும் 20 படகுகள் தயார் நிலையில் […]
கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை

வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில்கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! 3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று சென்னைக்கும் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே 4ஆம் தேதி மாலை கரையைக் கடக்க வாய்ப்பு
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வரும் 2-ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிச.3-ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். டிச.4-ம் தேதி அதிகாலை வங்கக்கடலில் உருவாகும் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு.
நெக்ஸ்ட் டூ டேஸ்சில்…புயல் உருவாக வாய்ப்பாம்?!
வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. அடுத்த இரண்டு தினங்களில் புயலாக மாற வாய்ப்பு.
வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை! நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் […]