குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள் விழுந்ததால் குளிப்பதற்கு தடை

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த பொழுது மெயின் அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறை கற்கள் சுற்றுலா பயணிகளின் தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி;

நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு

வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவியில் குளிக்க தடை

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது

பழைய குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த அருவிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

சற்று முன் அதிர்ச்சி தகவல்

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் நெல்லையை சேர்ந்த அஸ்வின் ( வயது 17) உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு;

மெயின் அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை; ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம், புலி அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றால சீசன் நிலவரம்| 04-07-2023

▶️மெயின் அருவி – தண்ணீர் ஆர்ப்பரிப்பு (குளிக்க அனுமதி) ▶️ஐந்தருவி – வெள்ளப்பெருக்கு (குளிக்கத் தடை) ▶️புலியருவி – மிதமான நீர்வரத்து (குளிக்க அனுமதி) ▶️பழைய குற்றால அருவி – மிதமான நீர்வரத்து (குளிக்க அனுமதி) ▶️வானிலை: இதமான சூழல்; மேகமூட்டம்; சாரல் .