சென்னை, தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி/அரசு முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரத சாகு மற்றும் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் திரு.பி.ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஆர்.எஸ்.(ஓய்வு) ஆகியோர் மக்களவைத் தேர்தல் – 2024 செலவினங்கள் தொடர்பாக பல்வேறு அமலாக்க அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டனர்
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு. ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

மதுரை: பிரதமர் மோடி பிப்.27-ல் மதுரை வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் பயண திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமை செயலர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம்

சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம். -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!