உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா காங்கிரஸில் இணைகிறார்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா இரு தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகினார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு முறையான நிதி பங்கீடு வழங்க கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போராட்டம்

நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக சித்தராமையா குற்றச்சாட்டு. போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரசை கண்டித்து, பாஜக எம்.பி.க்கள் போராட்டம். ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என, பாஜக குற்றச்சாட்டு. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் போராட்டம். ஜந்தர் மந்தரில் காங்கிரசும், காங்கிரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவும் போராட்டம்.
காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை..

பா.ஜ., 400 இடங்களில் வெற்றி பெற கார்கே ஆசி எனது குரலை எதிர்கட்சியினர் ஒடுக்க முடியாது;இந்திய நாட்டு மக்கள் பாஜகவின் பேச்சை கேட்க முடிவு செய்துள்ளனர்” “காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை வடக்கு தெற்கு என பிரித்தாள நினைக்கிறது; காங்கிரசின் கொள்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை; எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இப்படி ஆகிவிட்டது”
ராகுல் வாகனம் மீது தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங். வலியுறுத்தல்!

அசாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை தடுத்ததாக அம்மாநில பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்! அசாமில் இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கார்த்தி சிதம்பரம் பேசியதாக சர்ச்சை எழுந்தது. தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும் கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையானது
தி.மு.க. காங்கிரஸ் மோதல் உச்சத்தில்
தலை நிமிருமா தமிழக காங்கிரஸ் எம்.பி.,யின் அவமதிப்பு பேச்சு கரன்ஸி வசூலில் கவனம் செலுத்தும் காங்கிரஸ் அதிர்ச்சியில் நிர்வாகிகள்காங்கிரஸ்‘ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியடையாமல் இருந்திருந்தால், அக்கட்சிக்கு தலைக்கனம் ஏற்பட்டிருக்கக் கூடும்’ என தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார் பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்பலரும் அதிருப்தியில் திணறிக் கொண்டிருக்கின்ற் இது குறித்து, தமிழக காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் கூறியபோது ‘இண்டியா’ கூட்டணியை ஒருங்கிணைத்து, அதை பா.ஜ., வுக்கு எதிரான வலுவான கூட்டணியாக்க வேண்டும் என்பதில், முதல்வர் […]
திமுக கூட்டணியில் பிரதான இடம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி என சேர்த்து 11 இடங்கள் கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது
ஆனால் காங்கிரஸ் தரப்போ இந்தமுறை 15 சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்கிவிட வேண்டும் என உறுதியாக உள்ளது. திமுக வட்டாரத்தில் விசாரித்த வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 15 சீட்கள் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் 11 சீட்கள் தான் திமுக நிர்ணயித்துள்ள அளவுகோல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களவையில் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்!
ஊழல் இருக்கும் இடத்தில் எல்லாம் காங்கிரஸ்காரர் பாஜக குற்றச்சாட்டு

பணம் என்னும் இயந்திரமே சோர்ந்து போகும் அளவிற்கு பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது – பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராகுல் காந்தி ஊழல் மையம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.இதில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜானகிராமன், மண்டல தலைவர் செம்பாக்கம் […]
ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பிநட்டா

ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜே.பிநட்டா ஊழலும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார். ஒடிசாவில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டுக்கட்டாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, 300 கோடி ரூபாய் இதுவரை எண்ணப்பட்டுள்ளது. பணத்தை விரைவாக எண்ணி முடிக்க, 40 இயந்திரங்களும், 70க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, பார்லிமென்டில் உள்ள […]