இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

புதிய மத்திய அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது.
மூத்த பத்திரிகையாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

“ராமோஜி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்; ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைகளில் அவராற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்; இந்த கடினமான நேரத்தில் ராமோஜி ராவ்வின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,பர்மா ரயில்பாதைஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,

தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்“ திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம் அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின் தூதர் திரு.ஜோஜி சாமுவேல் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குதேவையான அனைத்துஉரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
எதிர்கட்சி தலைவர் சொன்னது போல சிறு சிறு பிரச்சினையில்லை பெரும் பெரும் பிரச்சினையெல்லாம் தீர்த்து வைத்துள்ளோம்.

மேலும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக அழைத்து செல்கிறோம். சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறோம். இத்துடன் இந்த கிளம்பாக்கம் பிரச்சினைகுறித்து இத்துடன் முடித்துகொள்வோம். முதல்வர் பேச்சு.
கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு தார்மீக உரிமை இல்லை …

கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசை சௌந்தரராஜனுக்கு தார்மீக உரிமை இல்லை, அவர் தெலுங்கானாவிற்கும் புதுச்சேரிக்கும்தான் ஆளுநர், தமிழ்நாடு பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் இல்லை; அவர் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் உள்ள கோயில்களில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளதா என்பதை முதலில் பார்த்துவிட்டு பேச வேண்டும் ,சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர்.
கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் அளிக்கும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.
“செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்”

“இனி திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை” “அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்” – விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில்