கட்டிட தொழிலாளர்களுக்கு உதவி

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கத்தின் ஒத்துழைப்போடு சி.கோவிந்தராஜ் பில்டர்ஸ் உரிமையாளரும் அரிமா சங்க தீபாவளி நிகழ்ச்சியின் மாவட்ட தலைவருமான சி.கோவிந்தராஜ் தலைமையில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது 100 கட்டிட தொழிலாளர்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.கே.கருணாகரன், கட்டுமான மற்றும் மனை கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.யுவராஜ், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஜே.விட்டோபிளாக்கா, சிட்லபாக்கம் சி.ஜெகன் எம்.சி, உள்ளிட்ட முக்கிய […]
ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெரு, வியாசர் தெரு, சர்வமங்களா நகர் 4வது தெரு, கருணாநிதி தெரு ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தனது சொந்த முயற்சியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி.
43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சொந்த முயற்சியால் சாலை பள்ளங்கள் மூடப்பட்டது

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட ராகவேந்திரா சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளங்களை ஏற்கனவே வெட்மிக்ஸ் எனப்படும் கலவை கொண்டு நிரப்பியும் மேலும் அந்த வெட்மிக்ஸ் நகர்ந்ததால் மேலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களை சீரமைப்பதற்கு பேட்ச் ஒர்க் எனப்படும் முறையில் தார் சாலை மேலும் அமைப்பதற்கு எழுதிக் கொடுத்த நிலையில் தற்காலிகமாக மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சொந்த முயற்சியால் பள்ளங்கள் மூடப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]
சிட்லபாக்கத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி […]
தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நமது மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கிய போது உடன் இருந்தவர்கள் வெங்கடசாமி, மனோ, பார்த்தசாரதி, அருள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.