மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை நியூ காலனி பாரதிபுரம் ஆகிய தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றினார்கள்

சேவா ரத்னா டாக்டர் வி,சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி உதவியுடன் இந்த சேவை நடந்தது.
குரோம்பேட்டை நேரு நகர் குமரன் குன்றம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி பெருவிழா

கடந்த 6 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வந்தது. சூரசம்கார நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குரோம்பேட்டை ஆர் எஸ் எஸ் பேரணியில் மத்திய மந்திரி முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்ட போது உரிய அனுமதி கிடைக்காததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. குரோம்பேட்டையில் நடந்த பேரணியில் மத்திய மந்திரி எல். முருகன் ,பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் பத்மகுமார், மாவட்ட தலைவர்கள் சீதாராமன், […]
Chrompet 19 November 2023
குரோம்பேட்டையில் கந்ந சஷ்டி பெருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் விசாகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாதாரணை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (19.11.23 ஞாயிறு) மாலை ஆறு மணிக்கு மேல் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத விசாகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் […]
மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]
திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்!

ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளி ஊர் செல்லும் பொது மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தல் – எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழையில் இதுதான் முதல் நிகழ்வு.. 16-ம் தேதி வரை தாக்கம் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்

கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி இது தான் என்றும் இதன் தாக்கம் 16 ஆம் தேதி காலை வரை இருக்கும் என்று கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கினாலும் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை எதுவும் […]