மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
சாலை சீரமைக்கும் பணி

சிட்லபாக்கம் பகுதியில் கஸ்தூரிபாய் தெரு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் உதவியால் சாலையை அமைப்பதற்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து புதிய தார் சாலை அமைப்பதற்கு பணி தொடங்கப்பட்டது.
சிட்லபாக்கத்தில் மழைநீர் சேகரிப்புகுழி தூர்வாரும் பணி

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் பரிமளா சிட்டிபாபு ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள 12 மழை நீர் சேகரிப்பு குழிகளும் பருவமழைக்கு முன்பே தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குரோம்பேட்டை ராஜ்பாரிஸ் நகர் -2, திருக்குறள் தெரு 1, உ.வே சுவாமிநாதன் தெரு 1 எண், பாம்பன் சுவாமிகள் சாலை -3, கலைவாணர் சாலை- 4 சுதா அவென்யூ- 1 ஆகிய இடங்களில் தூர் வாரும் பணிகள் நடந்தன.
கட்டிட தொழிலாளர்களுக்கு உதவி

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கத்தின் ஒத்துழைப்போடு சி.கோவிந்தராஜ் பில்டர்ஸ் உரிமையாளரும் அரிமா சங்க தீபாவளி நிகழ்ச்சியின் மாவட்ட தலைவருமான சி.கோவிந்தராஜ் தலைமையில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது 100 கட்டிட தொழிலாளர்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.கே.கருணாகரன், கட்டுமான மற்றும் மனை கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.யுவராஜ், அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஜே.விட்டோபிளாக்கா, சிட்லபாக்கம் சி.ஜெகன் எம்.சி, உள்ளிட்ட முக்கிய […]
ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெரு, வியாசர் தெரு, சர்வமங்களா நகர் 4வது தெரு, கருணாநிதி தெரு ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தனது சொந்த முயற்சியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி.
சிட்லபாக்கதில் மாடு முட்டி மூதாட்டி காயம்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோதி (70) இன்று காலை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அதே தெருவில் கூட்டமக இருந்த மாடுகள் ஒன்றை ஒன்று இடித்தவாறு ஓடினயபோதுமூதாட்டி ஜோதியின் மீது மூதாட்டி மீது மோதிசென்றது. இதனால் மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளை மாடுகளை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே […]
ரோலர் ஸ்கேட்டிங்: ஆசிய சாதனை படைத்த சிட்லபாக்கம் மாணவிக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி நகரில் உள்ள சாகச நாயகி செல்வி.கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆசியா கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு அதிலும் சிட்லபாக்கத்திற்கு பெருமை சேர்த்த சாகச நாயகிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மண்டல குழு தலைவர் […]
நகர்ப்புற சாலை 2 கோடி 11 லட்சத்தில் திட்டத்தின் கீழ்3 வது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கத்தில் 36 ரோடு தார் சாலை புனரமைப்பு பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டு ராகவேந்திரா சாலையில் தார் சாலை புனரமைப்பு பணியை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சாலை பணியினை துவக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரர்களை மழை காலத்திற்கு முன்பாக சாலை பணிகளை தரமாகவும் மாநகராட்சி வழிகாட்டுதலின் படி சரியான அளவீடுடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் […]
ஏரியை காப்போம்

தாம்பரம் மாநகரம், சிட்லபாக்கத்தில், (02/10/2023) காலை, Save Lakes (ஏரியை காப்போம்) சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R..ராஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், Chitlapakkam Rising நிர்வாகிகள், இ.மனோகரன், சி.சுரேஷ், இரா.விஜயகுமார், மலர்.மு.கருணா, சி.ஜெகன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், துரை.இரா.சிவகுமார், சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலை

சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 17ம் ஆண்டு விநாயகர் கண்காட்சியை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், E.மனோகரன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், இரா.விஜயகுமார் R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், ஆர்.பாலகுமரன், கே.நவீன்குமார், வ.ஜெயகுமார், ஜெ.நிர்மல், சீனிவாசன் டி.சம்பத், வாத்தியார் ராஜேந்திரன், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். உடன் விநாயகா குழுமத் தலைவர் சீனிவாசன்