செஸ் உலக கோப்பை: முதல் சுற்று டிரா

செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன்-ம் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா-வும் மோதினர். இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.
“உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரரும், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுகள்;

இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்திற்கும், நம் இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்”
37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்! விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்!

இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆனது இம்மாதம் இறுதியில் அதன் தரவரிசை பட்டியலை வெளியிடும்போது, கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் வகிக்கும் இந்திய வீரராக இருக்க மாட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த 17 வயதான குகேஷ், தனது […]