இந்தியாவில் வசூலைக் குறித்த 10 படங்கள்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகியுள்ளன. இதில், 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன.
விராட் கோலி புதிய சாதனை
15 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் களமிறங்கிய விராட் கோலி ஆந்திர அணிக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தனது 330-வது இன்னிங்ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 391 இன்னிங்ஸ்களில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்ததே […]
ஆம்னி பஸ் லாரி மோதல் 20 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 20பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது.
கரூர் சம்பவம் டெல்லி விசாரணைக்கு வர புஸ்சி ஆனந்துக்கு உத்தரவு
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையில் 41 பேர் கரூரில் பலியான சம்பவ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .தற்போது கட்சியின் முக்கிய தலைவரான புஸ்சி ஆனந்த் உள்பட 4 பேரை 29ஆம் தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது
தங்கம் விலை நாலு நாளில் 3360 உயர்வு
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.தங்கம் விலை கடந்த 4 நாட்களில் 3,360 அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.
கடலூர்:- சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை திறப்பு எப்போது?
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை வேலை கடந்த 15 ஆண்டுகளாக வைக்கிறது இந்த பணி எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது குரோம்பேட்டையில் ராதா நகர் செல்லும் பாதையில் தினசரி 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள்வந்து செல்கிறார்கள். ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது இதனை தீர்க்க அந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது 2015 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 17 கோடிக்கு இந்த திட்டத்தை உருவாக்க டெண்டர் […]
அனைத்து போக்குவரத்திற்கும் சேர்த்து ஒரே செயலி சென்னையில் அறிமுகம்
சென்னையில் மெட்ரோ ரயில் மின்சார ரயில் மாநகர பஸ் ஆட்டோ ஆகிய பொது போக்குவரத்து களை இணைத்து சென்னை ஒன் என்ற பெயரில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது இதில் நாம் போகும் இடத்தை தேர்வு செய்து அதன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விடலாம் ஒவ்வொரு போக்குவதற்கும் தனித்தனியா வாங்க வேண்டிய தேவை இல்லை இதை நேரத்தையும் மிச்சபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
TAMBARAM SEP 21 TO 27 VOLUME 13 ISSUE 24
நடிகர் ரோபோ சங்கர் மரணத்தின் திடுக்கிடும் பின்னணி
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் இன்று நடைபெற்றது. அவரது இல்லத்திற்கு திரை உலக பிரபலங்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நட்சத்திரங்களும் வந்திருந்தனர். சின்னத்திரை நடிகர்களும் திரண்டு வந்தனர். உதயநிதி வந்து அஞ்சலி செலுத்தினார் ரோபோ சங்கர் குறைந்த வயதிலேயே மரணம் அடைந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தார் இள வயதிலிருந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார். தினசரி குடிக்கும் பழக்கம் இருந்தது இதன் காரணமாக […]