5 ஆண்டுகளுக்கு பிறகு, 2 லட்சம் கன அடியை தாண்டிய காவிரி நீர்வரத்து

2019ஆம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் காட்சி அளிக்கும் ஒகேனக்கல் கர்நாடக அணைகளில் 2.3 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், இன்று மாலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு..
முழுதும் நிறைந்த மேட்டூர் அணை! 16 கண் மதகில் பொங்கி பாயும் காவிரி!

கர்நாடகா : காவிரியில் இருந்து நீர் வெளியேற்றம் 50500 கன அடியாக உயர்வு

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசுக்கு கண்டனம்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடக அரசின் முடிவை ஏற்று கொள்ள முடியாது காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு போதிய நீர் வழங்க உச்ச நீதி மன்றத்தை நாட முடிவு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – முதல்வர்
“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்”

தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. கர்நாடகாவை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். காவிரி தண்ணீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் –சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டிசம்பர் இறுதி வரை தண்ணீர் திறக்க பரிந்துரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் பரிந்துரை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் கூட்டம் நடக்கிறது. நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் – தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை
தமிழக அரசின் அழுத்தத்தை தொடர்ந்து காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என […]
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,243 கனஅடி நீர்திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,243 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,243 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 5,000 கனஅடியாக உள்ளது