பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
“நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்”

“மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” “கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது” “அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” “பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்” “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..
“பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது

வட மாநிலங்களையும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை தமிழ்நாட்டின் மீது பாஜக அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது”
பட்ஜெட் 2024 வரி குறைப்பு

செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 6 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 6.4 சதவீதம் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அமோசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி கணக்கு […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவினங்களுக்கான ரூ.4,634 கோடி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட முன் வரைவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த நிலையில் அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம். புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாதகாலத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்துள்ளார்.
2024-24 பட்ஜெட் – மாநில சொந்த வரி வருவாயின் ஆதாரம்
வணிக வரி – ₹1.43 லட்சம் கோடிபத்திரப்பதிவு – ₹23,370 கோடிகலால் வரி – ₹12,247 கோடிவாகனப்பதிவு – ₹11,560 கோடிபிற வகையில் – ₹4,615 கோடி
2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது. நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி […]
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 – முக்கிய அம்சங்கள்:

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் […]
பட்ஜெட் 2024 தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்