சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தனியார் பள்ளியில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை ராயப்பேட்டை போலீஸ் தேடி வருகிறது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

கராச்சி விமான நிலையம் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் இருவர் பலி; தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றதாக தகவல்.
சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

9 வது முறையாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்
சென்னை விமான நிலையத்திற்கு 7வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆளுநர் மாளிகையில் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.
3வது நாளாக வெடிமருந்து சேகரிக்கும் பணி

காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வெடி விபத்து நேர்ந்த இடத்தில் 500 மீட்டர் சுற்றளவில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகள் விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகளை 3வது நாளாக சேகரிக்கும் பணி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் கண்காணிப்பில் 50க்கும் மேற்பட்டோர் வெடி மருந்துகளை சேகரிக்கும் பணி தீவிரம் வெடி மருந்துகள் சிதறிக் கிடக்கும் இடத்தில் பொதுமக்கள் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்துகல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். […]