தாம்பரம் :மதுக்கடையை மூடக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் அரசு மதுபான கடை (கடை எண் : 4161) இயங்கி வருகிறது. இதன் அருகே தேவாலயம், கோவில்கள், பெருங்களத்தூர் ரயில் நிலையம், பள்ளி, அத்தியாவசிய தேவைக்கான கடைகள் என பல உள்ளது.மேலும் அவ்வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் இளைஞர்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் ரயில் நிலையம் சென்று ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இவ்வாறு […]
சிறை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை

அவரது அறிக்கை விவரம்: “கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமைதியான கோயம்புத்தூர் மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில், 58 உயிர்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு ஏற்படுத்திய காயத்தின் வலி இன்னும் ஆறாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில், நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவம் கோவையை உலுக்கியிருக்கிறது. இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை தேசிய […]
சட்டபேரவையில் இருந்து பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்
சட்டமன்றப் பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாண்பமை உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். காவிரி விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: இபிஎஸ் பேட்டி

பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இனங்க கூட்டணி முறிவு. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறினார்.
பாஜக அழைப்பின் பேரில் டெல்லி செல்லும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல். டெல்லி செல்லும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனும் இணைந்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
தமிழக பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது

இந்த கூட்டத்தில் தேசிய தலைமை சார்பில் பி.எல்.சந்தோஷ் பங்கேற்கிறார்.கூட்டணியில் இருந்து அண்ணா தி.மு.க விலகியது குறித்தும், எதிர்கால அரசியல் நகர்வு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்

கோவையில் இருந்து டெல்லி செல்லும் முன் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி பயணம் என்பது வழக்கமான ஒன்றுதான். என்னுடைய நடைபயணம் குறித்து, டெல்லியில் உள்ள தலைவர்களிடம் விளக்க உள்ளேன். நடைபயணத்தில் மூத்த தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். அவர்களின் தேதியை கேட்டுப்பெறவும் செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தியது பாஜக. அந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ளது. கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் […]
நான் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும் போதெல்லாம், பாஜகவினர் பிரச்னையை திசைதிருப்ப முயல்கின்றனர்

இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினையை தூண்டி வெறுப்புணர்வை பரப்புகின்றனர்; தற்போது நாட்டின் முன்பு இருக்கும் ஒரே பிரச்னை சாதிவாரியான கணக்கெடுப்பு தான்”
நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை

மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட @BJP4TamilNadu சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4ஆம் தேதி நமது நடைபயணத்தின் […]
தாம்பரம் பாஜக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர்காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் தேதி இரவில் இருந்து இவரை காணவில்லை.இந்நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு தலையில் கல்லை […]