கம்யூனிஸ்ட் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாள்

கம்யூனிஸ்ட் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு குரோம்பேட்டை நியூ காலனியை சேர்ந்த முன்னாள் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆர்.அனந்தலட்சுமி (ரயில்வே அதிகாரி ஓய்வு) சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்தபடம்.
மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா அமைச்சர் மரியாதை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 147வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் சாவடி தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆகியோர் மாலை அணிவித்து மறியாதை செய்தனர். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், தாம்பரம் […]
102 வயது கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள்.

சுதந்திர போராட்ட தியாகி மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அனபரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து […]
கு.காமராஜர்

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், […]
தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.
நாளை மறுநாள் முதல் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு. அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ – மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்-வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநா-ள் வாழ்த்து தெரிவித்தார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளான இன்று அவரை நேரில் சந்தித்து முதல்வ-ர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.