நீட் தேர்வு இனி நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை

‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டு, தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில், மாணவர்களும், பெற்றோரும் போலி பரப்புரைகளையும், வாக்குறுதிகளையும் நம்பவேண்டாம். ‘நீட்’ தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள்ளார். அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர் பாலகுருசாமி கூறியுள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தேசிய திறனறி முகமை, ‘நீட்’ தேர்வை நடத்துகிறது. நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்துவிட்டதால், இனிமேல் ‘நீட்’ […]