எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!

நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]

“சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது யாரும் குறுக்கிட கூடாது என்பது மரபு, ஆனால் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது கூட சபாநாயகர் அப்பாவு குறுக்கீடு செய்கிறார்;

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் எந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் கிடைத்ததில்லை; அதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்கும் அனுமதி வழங்கப்படாது; சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க காலம் தாழ்த்துவதற்காக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது; உண்மையில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் ” -சட்டப்பேரவை வளாக்கத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

கள்ளக்குறிச்சியில் சம்பவத்தால் சட்டப்பேரவை அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது சபாநாயகர் அப்பாவு

சட்டமன்றப்‌ பேரவை தலைவர்‌ மு.அப்பாவு அவர்கள்‌ தலைமையில்‌ தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, உலகத்‌ தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோரால்‌ உலக தாய்மொழி நாள்‌ உறுதிமொழி ஏற்கப்பட்டது

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் – நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதி

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழ்நாடு அரசு தயாரித்து, சபாயநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையை தவிர ஆளுநர் தனிப்பட்ட முறையில் பேசிய அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்! தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிநாளை 13ஆம் தேதி மறைந்த சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ். எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் […]

சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு ஒதுக்க கோரி எடப்பாடி தொடர்ந்த வழக்கில் டிச.12க்குள் பதிலளிக்க சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.