அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய விதிகள் .

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு, 2023ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தாலும், விதிகள் வகுக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், இந்த சட்டத்துக்கான விதிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடு குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் […]
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு உயர்வு

அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம், தணிக்கை) சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு (அப்பார்ட்மெண்ட்) உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கட்டிட நிறைவு சான்று பெறப்படுகிறது. கட்டுமான நிறுவனங்களால் அடிநிலம் (யுடிஎஸ்) மற்றும் கட்டிடமும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிரய ஆவணத்தில் அடிநிலம் மட்டுமே காட்டப்படுகிறது. இனிமேல், கட்டிடநிறைவு சான்று பெறப்பட்ட அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடிநிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனைஆவணமாக பதிவு செய்ய வேண்டும். […]