புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த “என் மண், என் மக்கள்” நடைபயண வழித்தடம் மாற்றம்

ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- புதிய வழித்தடத்தில் அனுமதி புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி
சங்கரய்யாவுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும்வரை ஜாமீன் வழங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார் – திருச்சியில் காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

ஜாமீன் தர வேண்டிய இடத்தில் இருப்பது பாஜக மாநில தலைவரா (அ) நீதிமன்றங்களா? மாநில பாஜக தலைவர்தான், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா என்ற சந்தேகம் அண்ணாமலையின் பேச்சிலிருந்து எழுகிறது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்ட மற்றவர்கள் இன்றும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் வளர முடியவில்லை என்பதால் செந்தில் பாலாஜி குறி வைக்கப்பட்டிருக்கிறார் – […]
சிறை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை

அவரது அறிக்கை விவரம்: “கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமைதியான கோயம்புத்தூர் மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில், 58 உயிர்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு ஏற்படுத்திய காயத்தின் வலி இன்னும் ஆறாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில், நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவம் கோவையை உலுக்கியிருக்கிறது. இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை தேசிய […]
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பாஜக தெளிவாக உள்ளது

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது – அண்ணாமலை தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசித்தோம் தமிழகத்தில் 9 தொகுதிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறோம்
கூட்டணிக்காக திமுக நாடகமாடுகிறது – அண்ணாமலை

காவிரி பிரச்னையில் காங்கிரசை கண்டிக்காமல் கூட்டணிக்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பேசாத திமுக, சட்டசபையில் தீர்மானம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. காவிரி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்னை உள்பட பெரும்பாலானவை திமுக ஆட்சியில் உருவானவை- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
அமித்ஷா, நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில தலைவர் மாற்றம் இல்லை என அறிவிப்பு

சென்னை: டெல்லியில் கடந்த இரு நாட்களாக தங்கியிருந்த அண்ணாமலை, நேற்று அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் அண்ணாமலையை மாற்றுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சில அறிவுரைகளை மட்டும் வழங்கி அனுப்பியுள்ளனர். மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கூட்டணி உடைந்ததை ஒட்ட வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. அதிமுக, பாஜ இடையே மோதல் ஏற்பட்ட பிறகு அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் நேரடியாக கோரிக்கை […]
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்

கோவையில் இருந்து டெல்லி செல்லும் முன் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி பயணம் என்பது வழக்கமான ஒன்றுதான். என்னுடைய நடைபயணம் குறித்து, டெல்லியில் உள்ள தலைவர்களிடம் விளக்க உள்ளேன். நடைபயணத்தில் மூத்த தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். அவர்களின் தேதியை கேட்டுப்பெறவும் செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தியது பாஜக. அந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ளது. கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் […]
நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை

மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட @BJP4TamilNadu சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4ஆம் தேதி நமது நடைபயணத்தின் […]
நாக்கை துண்டிப்பதாக பேசிய மத்திய அமைச்சர் ,அண்ணாமலை கண்டனம்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் ஷெகாவத்துக்கு கண்டனம் சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை துண்டித்து கண்களை தோண்டுவோம் என ஷெகாவத் பேச்சு வன்முறையை தூண்டுவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அண்ணாமலை கண்டனம்….