துணை ஜனாதிபதியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தற்போது புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, […]

அண்ணா பாராட்டிய சமூக சேவகர் வி.சந்தானம்

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த சமூக சேவகர் வி.சந்தானம் இவருக்கு தற்போது வயது 86 ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தினசரி மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்று வருகிறார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருஷ்கே உள்ள மூதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்ததும் மும்பைக்கு சென்று பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு முழு நேர மக்கள் பணியை மேற்கொண்டார். தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால் அவருக்கு […]

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (01.3.2024) அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொதுச்‌ செயலாளரும்‌, நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக்‌ கழக செயலாளர்‌ துரை வையாபுரி. அவைத்‌ தலைவர்‌ அர்ஜுன்‌ ராஜ்‌, துணை பொதுச்‌ செயலாளர்‌ மல்லை சத்யா ஆகியோர்‌ சந்தித்து பிறந்தநாள்‌ வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (1.3.2024) தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி. மு. க சார்பில், மாவட்ட கழகச் செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுரு சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் அமைச்சர் டி. கே. எம். சின்னையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநராட்சி 34வது வார்டு சிட்லபாக்கம் பகுதி குமார் அவென்யூ அறிஞர் அண்ணா பூங்கா புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் பூங்காவை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி டீன் வி.ரேவதி, லயன்.விக்டோ பிளாக்கா, முன்னாள் கவுன்சிலர் பிரதாப் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் கலந்து கொண்டார்கள்.

அண்ணா நினைவுநாளையொட்டி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

இதில் மண்டலக்குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள திருவுருவ படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்பு சண்முகம் சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.