ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது என்று ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்து அறநிலையத்துறை வளர்ச்சி குறித்து நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமநாராயண ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது ஆந்திராவில் கட்டாய மதமாற்றம் எங்கும் இருக்கக்கூடாது. அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கடினமான நடவடிக்கைகளின் மூலம் கட்டாய மத மாற்றங்களை தடுக்க முடியும். அர்ச்சகர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 […]
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்; ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களு நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.