பா.ம.க தலைவர் அன்புமணி தான்தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

“தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்குஅங்கீகார கடிதம் வந்துள்ளது பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துதேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது பாமகவின் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்குவழங்கபட்டுள்ளது” என – வழக்கறிஞர் பாலு தகவல்தெரிவித்தார்

அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக் குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தகவல்.

ஆட்சியில் பங்கு. அன்புமணிக்கு எடப்பாடி பதில்

அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சியில் பங்கு ஏற்போம் என்று அன்புமணி கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி “இன்னும் பந்தியிலயே உட்கார வைக்கல.. இலை ஓட்டைன்னு சொன்னா என்னங்க பண்றது?” என்று பதில் அளித்தார்

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்?

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது . அது வெளிநாட்டில் உருவானது என்று ராமதாஸ் தெரிவித்தார். தற்போது அந்த கருவியை வைத்தது யார் என்று ஆய்வு நடப்பதாக தெரிவித்தார்.

பாமக தலைவர் யார்? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ், அன்புமணி மோதல்

அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவராக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழு மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் எனத் தெரிவித்தார் இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது தொடர்ந்து நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் […]

.பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை: ராமதாஸ்

அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை – மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி அனைத்தும் நல்லவையாக நடக்கட்டும் என்றார். மேலும், கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

பாமக பொருளாளர் நீக்கம் | ராமதாஸ் அதிரடி .

பாமகவில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்து விட்டது .அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்க இன்று அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளராக மாறிய பொருளாளர் திலகபாமாவை கட்சியை விட்டு நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெற்றியை இழந்திருக்கலாம் களத்தை இழக்கவில்லை- பாமக தலைவர் அன்புமணி

மக்களவை தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தம் அளித்தாலும், அதனால் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை. இந்த தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால், களத்தை இழக்கவில்லை; களம் சாதகமாகவே இருக்கிறது. எங்கள் இலக்கு மக்களவை தேர்தல் அல்ல; 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். 2019ஆம் ஆண்டு தேர்தலை விட, இம்முறை ஆளும் கட்சியான திமுக 7% வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறது. ஆண்ட கட்சியான அதிமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13% […]