திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் – அமித்ஷா ஆவேசம்
புதுக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் பேசியதாவது:-அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. 2024இல் அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். வரும் நாட்களில் வலுவான கூட்டணியை அமைத்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்; திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா பேசினார்
தமிழ்நாட்டில்என்.டி.ஏ. ஆட்சி – அமித்ஷா உறுதி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ அரசாங்கம் அமையப் போகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் […]
மத்திய அமைச்சர் @AmitShah புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் I4C இன் முதல் நிறுவன தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முயற்சிகளை தொடங்கி வைத்தார்

சைபர் மோசடி தணிப்பு மையம் (CFMC), சமன்வே பிளாட்ஃபார்ம் (கூட்டு சைபர் கிரைம் விசாரணை வசதி அமைப்பு), ‘சைபர் கமாண்டோஸ்’ திட்டம் மற்றும் சந்தேக நபர் பதிவு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.
OPS தரப்புக்கு அமித்ஷா அட்வைஸ்

தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என முன்னாள் முதல்வர் OPS-ஸுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. EPS அணிக்கு மாறும் தனது ஆதரவாளர்களை தக்க வைக்க தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக OPS ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் OPS தரப்புடன் பேசிய பாஜக மேலிடம், தேவைப்பட்டால் தாமரைச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் OPS-ஸுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாம்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்:

மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரும்பான்மையுடன் 2 முறை மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது. குடும்ப அரசியல், எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் அகற்றி உள்ளார். 2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திரமோடி உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ். […]
அண்ணாமலை பாத யாத்திரை: ராமநாத புரத்திற்கு அமித்ஷா வந்தது ஏன்?

தமிழ்நாட்டில் எப்படியாவது வேரூன்றி கிளை பரப்ப திட்டமிட்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதற்கான மற்றும் ஒரு நிகழ்ச்சி தான் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை. இதை தவறாக கருதக் கூடாது.ஏற்கனவே வேல் யாத்திரை நடத்திய முருகன் மத்திய மந்திரியாகி விட்டார். அண்ணாமலைக்கு எந்த பதவி காத்திருக்கிறதோ தெரியவில்லை .அதே சமயம் ஏன் ராமநாதபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள். இத்தனைக்கும் அங்கு அதிமுகவினர் உதவி இல்லாமல் அங்கு யாரும் ஜெயிக்க முடியாது என்று கூட கே.பி .முனுசாமி சமீபத்தில் கூட கூறியிருந்தார்.ஆனால் […]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்!

அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்!