அமித்ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி விளக்கம்
கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு […]
பிரதமர், முதல்-மந்திரிகள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் – இன்று முக்கிய மசோதா தாக்கல்
கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் கொண்டு வருவதற்கான முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. எதிர்க்கட்சி முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கூட்டணி ஆட்சியா?அமித்ஷாவுக்கு எடப்பாடி பதில்
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தெரிவித்து இருந்தார் இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார் அதேசமயம் மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது எங்களுக்கு அமித்ஷா சொல்வது தான் வேதம் என்று கூறினார் இதனால் தொண்டர்கள் மத்தியில் அதிமுக தனி ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்ற குழப்பம் தோன்றியுள்ளது
கூட்டணி ஆட்சியா?அமித்ஷாவுக்கு எடப்பாடி பதில்
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தெரிவித்து இருந்தார் இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார் அதேசமயம் மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது எங்களுக்கு அமித்ஷா சொல்வது தான் வேதம் என்று கூறினார் இதனால் தொண்டர்கள் மத்தியில் அதிமுக தனி ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்ற குழப்பம் தோன்றியுள்ளது
விஜய் கட்சி பாஜக அணியில் சேர்ப்பா? அமித்ஷா பதில்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பா.ஜ.க கூட்டணியில் சேர்வாரா என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன அப்போதுதான் இது பற்றி தெளிவாக தெரியும். கட்சியில் நடிகர்களை சேர்ப்பது குறித்து உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்
மதுரையில் அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி?
மதுரைக்கு வரும் அமித்ஷாவை அன்புமணி சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8-ம் தேதி மதுரை வரும் அமித்ஷா, NDA கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். அப்போது பாமக உடனான கூட்டணியை இறுதிசெய்திட வேண்டுமென திட்டமிட்டுள்ளார். அதிமுகவுடனான கூட்டணி அறிவிப்புக்கு முந்தைய நாள் அன்புமணியை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது குறிப்பிடித்தக்கது.
ஜூன் 2-ம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல்.
ஜூன் 2-ம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த அமித் ஷா திட்டம்
சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு
அமித்ஷா குற்றச்சாட்டு – பினராயி விஜயன் மறுப்பு

அதிகனமழை பெய்யும் என 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் குற்றச்சாட்டு. வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்.
கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை

“கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது” “குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம்” “எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை” – மத்திய அமைச்சர் அமித்ஷா