இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்..” அமேசான் அதிரடி அறிவிப்பு..!!

வரும் 19-ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமேசான் அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இணைய வழி […]
ரூ.8,000 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி

அமேசான் விற்பனை தளத்தில் ‘ஐடெல் ஏ60எஸ்’ மாடல் ஸ்மார்ட்போனுக்கு 26% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8,499 என்ற விலையில் அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.6,299க்கு வாங்க முடியும், அதாவது மொத்தமாக ரூ.2,200 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.600 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.
அமேசான் கொடுத்த அதிர்ச்சி; மிரண்ட வாடிக்கையாளர்

டில்லியை சேர்ந்த அருண் குமார் மெஹர் என்பவர் அமேசானில் ரூ.90,000க்கு நவீன கேமரா லென்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு பார்சல் டெலிவரியானது. அதை திறந்து பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தார். அதில் கேமராவுக்குப் பதிலாக ரூ.300 மதிப்பிலான சீமைத் தினை இருந்தது. இதனால் தனது பணத்தை அமேசான் திருப்பித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.