தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஆக அமல்ராஜ் இருந்து வந்தார் அவர் திடீரென மாற்றப்பட்டார் அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார் அவர் இன்று முறைப்படி பதவி ஏற்றார் .அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதைப் போல தாம்பரம் மாநகர பகுதிகளிலும் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய போலீஸ் கமிஷனர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை !!

கூடுவாஞ்சேரியில் அரசு டாக்டரை மிரட்டி ரூ.12 லட்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]