சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார்;

ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் அதிமுக – பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்!: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நாளை ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு […]
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் […]
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்”

“காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே கனிமொழி, ஆ.ராசா கைது செய்யப்பட்டனர்” “கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தது, காங்கிரஸ் ஆட்சி” எடப்பாடி பழனிச்சாமி
என்டிஏ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அனைவருக்கும் தெரியும்

என்டிஏ கூட்டத்தில் 38 கட்சிகள், ஆனால் எதிர்கட்சி கூட்டத்தில் 26 கட்சிகள் தான் பங்கேற்றன – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை”

“ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக ஓ.பி.ரவீந்திரநாத் டுவிட்டரில் பதிவு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன். ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததன் பேரில் கலந்துக்கொள்கிறேன். அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளேன் – ஓ.பி.ரவீந்திரநாத்
யூடியூப் சேனலில் தன்னை ஆபாசமாக பேசியதாக நடிகை விந்தியா புகார்

அதிமுக நிர்வாகியும் நடிகையுமான விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் குமரன் என்பவர் மீது 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் 266வது குருபூஜை

பல்லாவரத்தில் இன்று (11.07.2023) இந்திய திருநாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் 266வது குருபூஜையை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு தமிழக யாதவர்கள் முன்னேற்ற சங்கத்தின் அழைப்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L., Ex.MP மற்றும் குரோம்பேட்டை பகுதி கழக செயலாளர் குரோம்பேட் M.K.சதீஷ் M.L. Ex.PP ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்கள். உடன் பல்லாவரம் M.ராஜலிங்கம், முன்னாள் பல்லாவரம் நகர மகளிர் […]
இலவசமாக ஒரு கிலோ தக்காளி, குடை தாம்பரம் அதிமுகவினர் அசத்தல்

கிழக்கு தாம்பரம் ஆண்டாள் நகர் பூங்கா அருகே 47 வார்டு அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளியுடன், குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்ச டி.கே.எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஒருகிலோ தக்களியுடன், குடையும் வழங்கினார்கள். தக்களி விலை கிலோ 120 க்கு விற்கும் நிலையில் குடையுடன் ஒருகிலோ தக்காளி வழங்கியதால் பெண்கள் ஆண்கள் என ஆர்வத்துடன் […]