பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் முத்துசாமியிடம் பணம்கேட்டு மிரட்டியதாக 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு

அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புதான் இறுதி முடிவு என்பதை தாங்கள் புரிந்து வைத்திருப்பதாக ஆணையம் பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக மாநாடு; எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள்: அதிமுகவினர் கலக்கம்

மதுரை: மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அதிமுகவின் மிக முக்கியமான மாநாடாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு மிகபெரிய மாநாட்டை எடப்பாடி தரப்பினர் நடத்த உள்ளனர். இந்த மாநாட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. தென்மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போஸ்டர்களை […]
திருவள்ளூர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை செய்யபட்டுள்ளார். 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வெட்டி கொலை செய்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாரிநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்தார். இவர் 2011-14 -ம் ஆண்டில் பாடிய நல்லூர் […]
சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

மதுரையில் எழுச்சி மாநாடு நடக்க இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து ஒரு தொடர் ஓட்டம்,கிட்டதட்ட 500 கிலோ மீட்டர்,ஒரு நாளை 60 கிலோ மீட்டர் வரை இந்த தொடர் ஓட்டத்தைக் கழகத்தின் சகோதரர்கள்,மாவட்டச் செயலாளர் அசோக் தலைமையிலே நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இன்றைக்கு நம்முடைய பொதுச்செயலாளரால் தொடர் ஓட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு. கேள்வி– காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்த கருத்து குறித்து பதில்—காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,ஏற்கனவே […]
அதிமுக மாநாடு; ஓபிஎஸ் ஆலோசனை

மதுரையில் அதிமுகவின் “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” ஆகஸ்ட் 20ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற சிகிச்சைக்காக அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக மாநாட்டின் மெயின் பிக்சர் 20ம் தேதி வெளியாகும்;

சித்திரை திருவிழா போல, அதிமுக மாநாடு நடத்தப்படும்.
பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன், மற்றவர்கள் விமர்சித்தால் நான் பதில் கூற முடியாது”

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை இடையேயான மோதல் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா பதில்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்தார்.